சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார்.
அப்போது அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் என இருவரும் சந்தித்துபேசிய பின்னர் டிரம்ப் கூறியபோது.. இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு 41 நிமிடங்கள் நடந்தது என்றும் வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு மிகவும் நன்றாகஇருந்தது என தெரிவித்தார்.
அணு ஆயுதம் மட்டுமின்றி, வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடனான சந்திப்புக்கு பின் இதனை தெரிவித்தார்.